காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க பாலுசெட்டிசத்திரம் காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகளான.
1) துளசிராமன் 24 2) மணிமாறன் 28 ஆகிய இருவரும் 110 குவிமுச – வின் படி நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சிபுரம் உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் மூலமாக 18.06.2021 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் மேற்படி, துளசிராமன் மற்றும் மணிமாறன் ஆகிய இருவரும் 16.07.21 அன்று அவர்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து தாமல் கலங்கள் அருகே, முட்டவாக்கத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் என்பவரை வழிமடக்கி கத்தியை காட்டி அச்சுறுத்தி பணம் பறிக்க முயற்சி செய்தது சம்மந்தமாக பாலுசெட்டிசத்திரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு.
நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். எனவே, இவர்கள் நன்னடததை பிணையை மீறிய குற்றத்திற்காக 284 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்