காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க காஞ்சி தாலுக்கா காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தபபட்ட சரித்திர பதிவேடு ரவடி
1) ஆனந்தன் 37. என்பவர் 110 குவிமுச – வின் படி ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் மூலமாக 16.09.2021 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் மேற்படி, ஆனந்தன் 37. என்பவர் 17.11.21 அன்று தனது கூட்டாளிகளுடன் சிறுவாக்கம், மேலாண்டைத் தெருவைச் சேர்ந்த ராஜமன்னர் 53. என்பவரை கொலை முயற்சி செய்தது சம்மந்தமாக காஞ்சி தாலுக்கா காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
எனவே, மேற்படி ஆனந்தன் நன்னடத்தை பிணையை பிணையை மீறிய குற்றத்திற்காக 270 நாட்கள் சிறையில் அடைக்க 21.12.21 அன்று காஞ்சிபுரம் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்