திருச்சி: அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ரவுடி வருண் என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளதால் அவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக எதிரியை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் அவர்கள் முன்பு கடந்த 02.12.21 தேதியன்று ஆஜர் செய்து ஒரு வருட காலத்திற்கு குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தவர் 20.01.22-ந்தேதி பணம் பறிக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே உறுதிமொழி பிரமாண பத்திரத்தில் கொடுத்த நன்நடத்தை நிபந்தனைகளை மீறியதற்காக 29.01.22-ந் தேதி நிர்வாக செயல்துறை நடுவர் விசாரித்து நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 307 நாட்கள் சிறை தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மேற்படி வருண் உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ரவுடி சக்திவேல் என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளதால் அவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக எதிரியை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் அவர்கள் முன்பு கடந்த 07.01.22 தேதியன்று ஆஜர் செய்து ஒரு வருட காலத்திற்கு குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தவர் 23.01.22-ந்தேதி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே உறுதிமொழி பிரமாண பத்திரத்தில் கொடுத்த நன்நடத்தை நிபந்தனைகளை மீறியதற்காக 29.01.22-ந்தேதி நிர்வாக செயல்துறை நடுவர் விசாரித்து நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 343 நாட்கள் சிறை தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மேற்படி சக்திவேல் உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. நிஷாந்த்