கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள செடுத்தான்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் 26. சின்ன காப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் 26. இவர்கள் இருவரும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். 2 பேருக்கும் நன்னடத்தை காரணமாக ஜாமீன் வழங்கப்பட்டது. நெய்வேலியில் நடந்த சதீஷ்குமார் கொலை சம்பவத்தில் ராஜ்குமாருக்கும், விக்னேசுக்கும் தொடர்பு இருப்பது தெர்மல் போலீசாருக்கு தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதுபற்றி அறிந்த விருத்தாசலம் சப்-கலெக்டர் திரு.பழனி நன்னடத்டதை பிணை மீறிய குற்றத்துக்காக அவர்கள் 2 பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.