திண்டுக்கல் : நத்தம் அருகே நாய்க்கு விஷம் வைத்து கொலை செய்ததது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவர் தனது மாமர தோட்டத்தில் காவலுக்காக இரண்டு நாய்களை வளர்த்து வந்துள்ளார். இன்று காலை தனது தோட்டத்திற்கு சென்ற துரைப்பாண்டி இரண்டு நாய்களில் ஒரு நாய் வாயில் நுரை கக்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளது .
அருகிலே ஒரு பிளாஸ்டிக் பையில் கோழிக்கறியுடன் விவசாய பகுதியில் செடி , மரங்களில் வேர்பகுதிகளை தாக்கும் புழு ,பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் குருணை மருந்து (அதிக விஷதன்மை உள்ளது ) கேரி பைகளில் உணவு பொருள்களுடன் கலந்து வைத்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த துரைபாண்டி நத்தம் காவல்துறையினரிடம் நாய்க்கு விஷம் வைத்துக் கொன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்று நாயின் உடலை கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தார். இதையடுத்து நத்தம் போலீசார் சரவணன் மற்றும் அவரது தாய் சரசு ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா