திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையத்தில், பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள் திரு. பிச்சைமணி, ராமநாதபுரத்திற்கும், திரு. சேகர், கன்னியா குமரிக்கும், காவலர்கள் திரு. வீரையா தூத்துக்குடிக்கும், திரு. சரவணன் திருநெல்வேலிக்கும், இடமாற்றம் செய்ய, தென் மண்டல ஐ.ஜி. திரு. அஸ்ரா கார்க், உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நத்தம்காவல் நிலையத்தில், உள்ள 3 காவல் துறையினர் , குற்றவாளியை சிறையில் அடைக்க சென்றபோது, குற்றவாளியிடம் செல்போன் கொடுத்து பேச வைத்த காரணத்திற்காக 3 பேர், திண்டுக்கல் ஏ.ஆர்.க்கு இடமாற்றம் செய்ய, எஸ்.பி. திரு. சீனிவாசன், உத்தரவு பிறப்பித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா