திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் கிராமத்தை சேர்ந்தவர் வல்லரசு என்ற வாலி (21), இவர் மீது பல்வேறு திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்று மாலை வல்லரசு நெய்தவாயல் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள குளத்தின் அருகில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். மது அருந்தி கொண்டிருந்த போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வல்லரசை அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டி விட்டு தப்பி சென்றனர். வல்லரசுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் போலீசார் வல்லரசுவை மீட்டு மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு