சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்டம், தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்திற்குட்பட்ட பூங்குடியேந்தல் செல்லும் பாதையில் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்தும் பொழுது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 1. செல்வகுமார் (34/24, , (எ) பூங்குடியேந்தல்), 2. விமல் (26/24, 3. ராஜா (31/24, 4. ராமு (26/24, 5. கரண் (25/24,, 6. கார்த்திக் பாண்டி (23/24, ஆகிய அனைவரும் ஒன்று சேர்ந்து பாண்டியராஜன் (எ) ராதாகிருஷ்ணன் (38/24, என்பவரை வெட்டி கொலை செய்துவிட்டு யாருக்கும் தெரியாமல் தேரளப்பூர் முத்துநாட்டு கண்மாய்க்குள் புதைத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
பிறகு தகவல் அறிந்த காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், 14.05.2024ம் தேதி கொலை செய்து புதைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்து, பிரேத பரிசோதனைக்காக பிரேதம் தோண்டி எடுக்கப்பட்டு டாக்டர். செந்தில்குமார் (சட்டம் சார்ந்த மருத்துவர், சிவகங்கை), திரு.பார்த்திபன் (துணைக்காவல் கண்காணிப்பாளர், தேவகோட்டை), திரு.சிவதுரை (துணைக்காவல் கண்காணிப்பாளர், தடய அறிவியல் துறை), திரு.அசோக்குமார் (தாசில்தார், தேவகோட்டை), திரு.சரவணன் (காவல் ஆய்வாளர், தேவகோட்டை தாலுகா காவல்நிலையம்), திரு.கணேசமூர்த்தி (காவல் ஆய்வாளர், தேவகோட்டை நகர் காவல் நிலையம்) மற்றும் சார்பு ஆய்வாளர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளான செல்வக்குமார், ராஜா, கரண், கார்த்திக் பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப., அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.