இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இதம்பாடலைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் தர்மர் என்பவர் காணாமல் போனதாக அவரது சகோதரி யசோதா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏர்வாடி தர்ஹா காவல் நிலையத்தில் குற்ற எண்: 57/2011 u/s Man missing -ன் பிரகாரம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காவல்துறையினரின் விசாரணையில் தர்மர் மற்றும் அவரது நண்பருக்கிடையில் ஏற்பட்ட பணப்பிரச்சினையில் அவரது நண்பரே தர்மரை கொலை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 30.03.2016-ம் தேதி Man missing வழக்கானது u/s 120 (b),302,201 IPC-ன் படி கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, பனையடியேந்தலைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் முருகேசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
இவ்வழக்கின் விசாரணை முடிந்து 16.02.2022-ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு.சண்முகசுந்தரம் அவர்கள் மேற்படி குற்றவாளியான முருகேசன் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 12,000/– அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் 6 மாதம் மெய்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்கள்.
கொலை வழக்கில் சிறப்பான விசாரணை மேற்கொண்டு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த ஏர்வாடி தர்ஹா காவல்துறையினரை காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் பாராட்டினார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை