கோவை: கோவை மாநகர ராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மது போதையில் தன் நண்பரை கத்தியால் குத்திய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது மது குடிப்பது போல செல்பி எடுத்து அதை, அவர்களுக்கான வாட்ஸ்அப் குரூப்பில் ஃபார்வேர்ட் செய்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின் ஐயப்பன் தன் நண்பர்களால் கத்தியால் குத்தப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராமநாதபுரம் காவல் துறையினர் விசாரித்து, ஐயப்பன் நண்பர்களான பிரபாகரன், சந்தோஷ்குமார், மகேஷ், நந்தகுமார், கிருஷ்ணமூர்த்தி, பிரிதிவிராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.N. சக்திவேல் மணி
கோவை மாவட்ட தலைவர் – சமூக சேவை பிரிவு