திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த அஜீத் (23) கோழி கறி கடையில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 18ஆம் தேதி இரவு மீஞ்சூர் அருகே ராமரெட்டிபாளையம் பகுதியில் உள்ள முட்புதரில் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த ஆண் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த திங்களன்று நண்பர்களுடன் சென்று காணாமல் போன அஜீத் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அஜீத்தின் நண்பர்களை பிடித்து நடத்திய விசாரணையில் கடந்த திங்களன்று மீஞ்சூரில் உள்ள மதுபானக்கடையில் மது அருந்தும் போது அஜீத்தின் காலில் ஏற்பட்ட காயத்தை கிண்டல் செய்ததால் தகராறு ஏற்பட்ட நிலையில் அதற்கு பிறகு மீண்டும் அஜீத்தை அழைத்து சென்று ஏரிக்கரையில் மது ஊற்றி கொடுத்து கத்தியால் சரமாரியாக வெட்டி அஜீத்தின் கை, கால்களை கட்டி அருகில் இருந்த கிணற்றில் சடலத்தை வீசியது தெரிய வந்தது. நாகராஜ், கணேஷ், மோகன், திருட்டு கார்த்திக், சாய்குமார் ஆகிய 5பேரை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு