வீட்டில் நடைபெறும் , ஒரு சாதாரண பேச்சை கவனித்து இருக்கின்றீர்களா? பெரியோர்கள் சிறிய பிள்ளைகளைப் ,பார்த்து சரியாக நட, நிமிர்ந்து நட, கூன் போடாதே, கோணல் மாணலாக நடக்காதே , எனச் சொல்வார்கள். பெரிசு அப்படித்தான் தொண தொண, வென்று பேசும். வேறு வேலையில்லை ,என அவர்களின் பிள்ளைகளே கூறுவார்கள். நமக்கு எதுவும் பணம் செலவழித்து, பல விளக்கப் படங்களின் மூலம் விவரித்தால் , மட்டுமே சரி என ஏற்றுக் கொள்வோம்.
பொத பொதவென்று உடம்பினை, லூசாக தொய்வாக வைத்து கொண்டு நடக்காதீர்கள். ஒரே நாளில் 10 கிலோ, குறைக்கும் எண்ணத்தினைக் கைவிடுங்கள். தலை நிமிர்ந்து இருக்க வேண்டும். நேரான பார்வை, இருக்க வேண்டும். உங்கள் தாடை நுனி பூமிக்கு இணையாக, இருக்க வேண்டும். காதும் தோள் பட்டையும் சீராக இருக்க வேண்டும். முதுகு நிமிர்ந்து இருக்க வேண்டும். தோள்கள் உயர்த்தி இல்லாமல், சாதாரணமாகவும் முன் நோக்கி வளையாமல், சற்று பின் நோக்கியும் இருக்க வேண்டும். கைகளை ,நிதானமாய் வீசி நடக்க வேண்டும்.
நாய்களை பிடித்து நடைபயிற்சி, செல்பவர்கள் ஒரு பக்கமாக சாய்ந்து, நாயின் பின்னே இழுத்துக் கொண்டு, போகக் கூடாது. உடலில் பல பாதிப்புகள் ஏற்படும். மேலும் சில நேர்மறை விளக்கங்களை, உதாரணமாக முறையான ஷீ, பாதம் வைக்கும் முறை இவைகளை பயிற்சியாளரிடம், ஒரு முறையேனும் கேட்டு அறியவும். மேற்கூறப்பட்டவை நடைபயிற்சிக்காக மட்டுமல்ல. சாதாரணமாக நடக்கும் பொழுதும், சில குறைபாடுகள் பலருக்கு இருக்கின்றன. அதனையும் நேர்முகமாக ,கேட்டறிந்து சரி செய்துக் கொள்வது நல்லது.
இந்த நடைக்கும் , நம் உடல் நலத்திற்கும், நீங்கள் நினைப்பதனைக் காட்டிலும், கூடுதல் தொடர்புகள் உள்ளன. முறையான உடல் அமைப்பினை, கொண்டு நடக்கும் பொழுது சில பலன்கள் அமைகின்றன. உங்கள் எலும்புகள், மூட்டுகள், முறையான அமைப்பிலேயே இருக்கின்றன. முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி, கால்வலி இருக்காது. தசைகளில் வலி, சோர்வு குறையும், காயங்கள் ஏற்படாது, தடுமாறாமல் நடக்க முடியும். இன்றே முயற்சி செய்வோமே!