கோவை : கோவை ஒப்பணக்கார வீதியிலுள்ள தங்கமயில் நகை கடைக்கு நேற்று ஒரு பெண் டிப்டாப் உடையணிந்து மோதிரம் வாங்க சென்றார். கடை ஊழியர்கள் அவருக்கு மோதிரங்களை காட்டினார்கள். ஒரு மணி நேரம் பார்த்து விட்டு, தனக்கு எந்த மோதிரமும் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு வெளியே சென்றார். அவர் சென்ற பிறகு கடை ஊழியர்கள் மோதிரங்களை சரி பார்த்தனர். அதில் ஒரு மோதிரம் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் பார்த்தனர். அப்போது ஒரு பெண் மோதிரத்தை நைசாக திருடுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை தேடினார்கள் .அப்போது கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணை கையும் களவுமாக பிடித்து உக்கடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் . போலீசார் அவளை கைது செய்தனர்.
விசாரணையில் அவள் காரைக்குடியை சேர்ந்த. பாண்டி மீனா ( வயது 40 ) என்பது தெரியவந்தது . இவளிடமிருந்து 6 .8. கிராம் தங்க மோதிரமும், ரூ 4 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அவளிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்