சென்னை : ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண் அளித்த மோசடி புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த முகமதுஅர்மான் 29, என்பவர் சமூகவலைதளத்தில் நடிகர் ஆர்யாவாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அந்த பெண்னிடம் பேசிவந்ததும்,
மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் பறித்ததும், மேற்படி குற்றசெயலுக்கு முகமது அர்மானின் மைத்துனர் முகமது ஹுசைனி பையாக் 35, என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
உதவி ஆணையாளர் திரு.ராகவேந்திரா.திரு. K.ரவி தலைமையில் ஆய்வாளர் திரு.சுந்தர் மற்றும் தனிப்படையினர், மேற்படி குற்றவாளிகள் முகமதுஅர்மான் மற்றும் முகமது ஹுசைனி பையாக் ஆகிய இருவரையும் ராணிப்பேட்டை மாவட்டம், பெரும்புலிப்பாக்கத்தில் கைது செய்தனர். குற்றவாளிகளிடம் இருந்து 2 மொபைல் போன்கள், 1 லேப்டாப், 1 ஐபேடு மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி குற்றவாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.