பெரம்பலூர்: கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவருவதை கட்டுப்படுத்தும் விதமாக பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் அத்தியாவசிய தேவைக்காக கடைகளுக்கு பொருள்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியும், பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கியும் கொரோனா வைரஸ் நோய் தொற்று முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொடர் விழிப்புணர்வு பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பாக நடத்தப்பட்டு வருகின்றது.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை