தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS, அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் (25.09.2022), தமிழக கேரள எல்லையான புளியரை காவல் சோதனைச் சாவடியில் புளியரை காவல் துறையினருடன் இணைந்து நக்சலைட் தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறி வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து தகுந்த அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.