திருவண்ணாமலை: திருவண்ணாமலை சிறுநாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன், 44 என்பவர் தனது தாய், தந்தை விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், மானந்தல் கிராமத்தில் வசித்து வருவதாகவும், இந்நிலையில் கடந்த 29.07.2021 ஆம் தேதி தனது தந்தை கணேசன் மானந்தல் கிராமத்தில் இறந்துவிட்டதாகவும்,
இதற்காக அங்கு குடும்பத்துடன் சென்று விட்டதாகவும், கடந்த 03.08.2021 ஆம் தேதி சிறுநாத்தூருக்கு வந்து நிலத்தை சுற்றி பார்த்துவிட்டு, பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு மானந்தல் சென்றுவிட்டதாகவும்,
05.08.2021 ஆம் தேதி தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக, தனது மைத்துனர் போன் மூலம் சொன்ன தகவலை அடுத்து, தான் வந்து வீட்டை பார்த்தபோது வீட்டின் கதவு மற்றும் பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்த இரண்டு ஒரு சவரன் செயின், ஒரு அரை சவரன் மோதிரம், ஒரு கால் சவரன் மோதிரம், ஒரு கால் காசு என மொத்தம் 3 சவரன் தங்க நகையும், இரண்டு லட்ச ரூபாய் ரொக்கப் பணமும் காணாமல் போயிருப்பதாக கொடுத்த புகாரையடுத்து,
கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி, திருவண்ணாமலை நகர உதவி காவல் கண்காணிப்பாளர் திருமதி.செல்வி. திருமதி.D.V.கிரன்ஸ்ருதி,இ.கா.ப., அவர்களின் தலைமையில், கீழ்பெண்ணாத்தூர் காவல் ஆய்வாளர் திரு.R.லட்சுமிபதி, உதவி ஆய்வாளர்கள் திரு.K.ராமச்சந்திரன், திரு.G.ரவிச்சந்திரன் மற்றும் காவலர்கள், ராமனின் மருமகனான விஜயகுமார் 24. சென்னை என்பவரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை செய்ததில்,
தனது மாமனார் ராமன் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் சென்னையில் திருட்டு மற்றும் கஞ்சா விற்பனை செய்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளியே வந்து இருப்பதும் தெரியவந்தது.
அவரை கைது செய்து, அவரிடமிருந்து திருடுபோன இரண்டு ஒரு சவரன் செயின், ஒரு அரை சவரன் மோதிரம், ஒரு கால் சவரன் மோதிரம், ஒரு கால் காசு என மொத்தம் 3 சவரன் தங்க நகைகள், இரண்டு லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ஒரு இரண்டு சக்கர வாகனம் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.