ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி சாய் அபிராமி நகரை சேர்ந்தவர் துரைராஜ் 63. இவர் நேற்று முன்தினம் காலை துரைராஜ் குடும்பத்தினருடன் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 28 பவுன் தங்க நகை மற்றும் ரூ.60 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து கோபி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்