திருவாரூர் : திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலைய பகுதியில் (70). வயது மதிக்கதக்க மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி அவர் அணிந்திருந்த 04 பவுன் தங்க சங்கிலி மற்றும் 1 1/4 பவுன் தங்க மோதிரத்தை பறித்து சென்ற மாங்குடி கூடூர் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் கணேசமூர்த்தி என்பவர் கைது. அவர் திருடிய 5 1/4 பவுன் தங்க நகைகள் முழுவதும் மீட்கப்பட்டது. அவர் மீது முன்னதாக திருட்டு, கொள்ளை, வழிப்பறி, அடிதடி உட்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு. மேற்படி குற்றவாளி வயதான நபர்களை கண்காணித்து அவர்களுடன் பேசி, நல்லவர் போல் பழகி அவர்கள் கவனத்தை திசை திருப்பி அவர்களிடமிருந்து நகை, பணத்தை திருடுவதை வழக்கமாக கொண்டவர் என்பது விசாரணையில் தெரிய வருகிறது. இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். சிறப்பாக செயல்பட்டு நகை திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்து, திருடு போன நகை முழுவதும் பறிமுதல் செய்த திருத்துறைப்பூண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முத்துக்குமார் அவர்கள் தலைமையிலான தனிப்படை காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.