கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுமூங்கம்பட்டி கிராமத்தில் அருந்ததீயர் காலனியில் மாரியப்பன் என்பவர் குடியிருந்து வருவதாகவும் 25.03.2024 ஆம் தேதி இரவு வீட்டின் கதவை திறந்துவைத்து ஹலில் தூங்கிக்கொண்டிருந்த போது சுமார் 01.30 மணியளவில் வீட்டின் பூஜையறையில் பொருட்கள் விழும் சத்தம் கேட்டு உள்ளே சென்று பார்த்த போது குற்றவாளி நின்றுக்கொண்டு இருந்தவனை பிடித்து விசாரணை செய்த போது சாமிரூமில் இருந்த 6 கிராம் தங்க செயினை திருடி பாக்கெட்டில் வைத்திருந்தான் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் மத்தூர் காவல் நிலையத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவித்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நகை திருடிய நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர் மாரியப்பன் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
All reactions:
33