செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாரதியார் தெருவில் 1-ஆம் தேதி அதிகாலை பிரபல தொழிலதிபர் ரித்தீஷ் என்பவரது வீட்டில் 119-சவரன் தங்க நகைகள் மற்றும் 6-லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதனால் புகாரின் பெயரில் தாம்பரம் துணை ஆணையாளர் பவன் குமார் ரெட்டி, கூடுவாஞ்சேரி உதவி ஆணையாளர் ராஜீவ் ஆரோன் பிரின்ஸ் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இதன் அடிப்படையில் மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் ஒருவர் திருடிய நகைகளை மூட்டை கட்டி தோளில் சுமந்து கொண்டு செல்வது பதிவாகி இருந்தது. மேலும் போலீசார் 200 மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை பார்த்து போது கடலூரில் இருந்து அரசு பேருந்து மூலம் மறைமலைநகர் பேருந்து நிலையத்திற்கு குற்றவாளிகள் மாஸ் அணிந்து கொண்டு இறங்கியது தெரிய வந்தது. மாஸ் அணிந்த படி இருவரும் தொழிலதிபர் வீட்டிற்கு சென்று கொள்ளையடித்தது தெரியவந்தது.
மேலும் கடலூரில் இருந்து வந்த அரசு பேருந்து பதிவு என்னை கைப்பற்றிய போலீசார்,நேரடியாக கடலூருக்கு சென்று பேருந்து நிலையத்தில் இருநத் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது கொள்ளையடித்த இருவரும் திருடுவதற்கு இரவு 11 .30 மணிக்கு பேருந்தில் ஏறியது பதிவாகி இருந்தது. மேலும் கடலூர் பகுதியில் பதிங்கி இருந்த கடலூர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த செந்தில் முருகன் வயது (31). சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் வயது (25). ஆகிய இருவரை கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் திருடிய நகைகளை சென்னை ஆதம்பாக்கம் அருகே காட்டு பகுதியில் மண்ணுக்குள் புதைத்து வைத்ததாக தெரிவித்தனர்.மேலும் இருவரையும் அழைத்துக் கொண்டு போலீசார் ஆதம்பாக்கம் பகுதிக்கு சென்று புதைத்து வைத்த நகைகளை பறிமுதல் செய்தனர்.
இதில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் வீட்டில் நகைகளை கொள்ளை அடிக்கும் போது, கைரேகைகளை அழிப்பதற்காக பயன்படுத்திய துணிகளையும் சேர்த்து மூட்டை கட்டி தூக்கி சென்றது தெரிய வந்தது. அது மட்டுமில்லாமல் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று தான் சிறையில் இருந்து வெளிய வந்தவுடன் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமில்லாமல் இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையத்தில் முப்பதுக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். நகைகளை கொள்ளையடிக்கும் போது அந்தப் பகுதியில் புதிதாக கட்டிடப் பணிகள் நடைபெறும் இடத்தில் இருக்கும் கடப்பாறை போன்ற ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வீட்டை உடைத்து நகைகளை கொள்ளையடிப்பதா கவும் தெரிவித்துள்ளனர். கொள்ளை அடிக்கப்பட்ட அவர்களிடம் இருந்து 119-சவரன் தங்க நகைகள் மற்றும் 40,000 ரூபாய் ரொக்கம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போலீசார் வீட்டினை பூட்டி கொண்டு ஊருக்கு செல்லும் நபர்கள் தங்கள் நகைகைள பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளனர்இதனால் அந்தப் பகுதியில் காவலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்