சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு காவல் நிலைய சரகத்தில் உள்ள அட்டிகா கோல்டு நிறுவனத்தில் கடந்த 07.12.2021 ம் தேதி காலை 9.30 மணிக்கு அலுவலகத்தை பணியாளர்கள் வந்து திறந்து பார்த்த போது யாரோ மர்மநபர்கள் லாக்கரில் இருந்த 215 கிராம் தங்க நகைகள் மற்றும் பணம் 60000 ரூபாய் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டதாக காவல்நிலையம் வந்து புகார் அளிக்கவும் காரைக்குடி காவல் நிலைய கு. எண் 627/2021 ச. பி. 454, 457, 380 இ. த. ச. ஆக வழக்குப் பதிவு செய்த பின்னர், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு செந்தில் குமார் அவர்களின் உத்தரவின் பேரிலும், காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் *திரு வினோஜி . அவர்கள் மேற்பார்வையில் தனிப்படை காவல் ஆய்வாளர் திருமதி. தனலட்சுமி அவர்கள் SI.பார்த்திபன் Hc. 348 கருப்பையா HC 1369 சுரேஷ் குமார், Hc.862.முருகன்,Gr I. 1570 பார்த்திபன், PC 1920. தட்சிணாமூர்த்தி, ஆகியோர் அமைக்கப்பட்டு சம்பவ இடத்தை பார்வையிட்டு, குற்றவாளியை தேடிய நிலையில் 30 க்கும் மேற்பட்ட CCTV காட்சிகளை பார்த்தும், புலன்விசாரணை மேற்கொண்டதில் நிறுவனத்தின் கதவையும் லாக்கரையும் சாவியை கொண்டு திறந்து திருடப்பட்டிருந்ததால் அந்த நிறுவன ஊழியர்களிடமும், நிறுவனத்தில் பணிபுரிந்து இடையில் பணியில் இருந்து நின்ற முன்னாள் ஊழியர்கள் இரண்டு பேரிடமும் விசாரணை செய்ததில், வேலையைவிட்டு நின்ற முன்னாள் ஊழியர்கள் இருவர் தான் இந்த திருட்டு சம்பவத்தில் மூளையாக இருந்து செயல்பட்டது கண்டறியப்பட்டது. விசாரணையில் அவர்கள் இருவரும் மூன்று மாதங்களுக்கு முன்பாக வேலையை விட்டு நின்றுவிட்டதாகவும் வேலைபார்த்த சமயத்தில் நிறுவத்தின் சர்டர் சாவி, லாக்கர் சாவி இரண்டின் ஸ்பேர் சாவிகளை தன்வசம் வைத்திருந்ததாகவும் ,அதனால் தனது நண்பர்கள் மூலம் இந்த திருட்டு சம்பத்தை நடத்தியதையும் ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் 22 பவுன் மற்றும் பணம் 60,000/- ரூபாய் ஆகியவற்றை கைப்பற்றினோம். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்படி சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளை தேடிவருகிறோம். பின்னர் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தோம்.
