கோவை: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் நகை கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாதம் ஒருமுறை நகைக்கடையை திறந்து இருப்பு உள்ள நகைகள் கணக்கெடுக்கப்பட்டு பதிவேட்டில் பதிய விடப்படுவது வழக்கம் .அந்த வகையில் மேலாளர் தேவராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையில் உள்ள நகைகளை கணக்கு வழக்குகள் சரி பார்த்தார்.
அப்போது சுமார் 130 கிராம் அளவு எடையுள்ள நெக்லஸ் தங்க செயின் பிரேஸ்லெட் உள்ளிட்ட நகைகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.இதன் மதிப்பு சுமார் 6 லட்ச ரூபாய் ஆகும். இதையடுத்து நகைக்கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை தேவராஜ் ஆய்வு செய்தார். அதில் கடையில் பணிபுரியும் பொள்ளாச்சி அடுத்த நெகமம் பகுதியை சேர்ந்த நாகமாணிக்கம் என்பவரின் மகன் கௌதம் (26) என்பவர் திருடிச் செல்வது தெரியவந்தது.
இதுகுறித்து நகை கடையின் மேலாளர் தேவராஜ் காட்டூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.