திருவாரூர்: திருவாரூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் இரயில்வே நிலையம் அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் எம்.எஸ்சி.(அக்ரி), அவர்கள் (18.05.2024) போக்குவரத்து நெரிசல் பற்றியும், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்தும் திடீர் ஆய்வு செய்து, பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்து காவலர்கள் அல்லது காவலர்கள் பணியில் ஈடுபடுத்த வேண்டுமென திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு அறிவுறுத்தினார்கள். அப்போது, திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.P.மணிகண்டன், அவர்கள் உடனிருந்தார்கள்.