திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் , M.Sc.(Agri)., அவர்கள் (11.12.2024) மன்னார்குடி உட்கோட்டம், மன்னார்குடி நகர காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தும், பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலைகளையும் ஆய்வு செய்து, அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.ஆய்வின் போது மன்னார்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரதீப், அவர்கள் உடனிருந்தார்கள்.