சிவகங்கை : சிவகங்கை நகர காவல் ஆய்வாளர் திரு.மோகன் அவர்களின் சமூக சேவையை பாராட்டி சோழன் உலக சாதனை புத்தகம் நிறுவனத்தினால் சமூகநல சேவை சான்றிதழ் வழங்கப்பட்டது. கடமையில் மிகவும் கண்ணியமிக்கவரான இவர் கொரோனா நோய் பாதிப்பு காலப்பகுதியில் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அரசினுடைய அனைத்து ஆணைகளையும் முறையாக அமலாக்கம் செய்தும், மக்களுடைய தேவையற்ற நடமாட்டத்தை இரவு பகல் பாராமல் இருக்க காரணமாக இருந்த அதிகாரிகளில் ஒருவராவர்.
தனது சொந்த செலவில் தினமும் நூற்றுக்கணக்கான ஏழை மக்களுக்கு உணவு வழங்கியும் வருகிறார். மேலும் இதுவரை 5 ஆயிரம் முகக் கவசங்களை தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார். மேலும் பணியிலிருந்த காவலர்களுக்கு முகக்கவசம் கையுறை மற்றும் கிருமிநாசினி போன்றவற்றை வழங்கியுள்ளார்.
அனைத்துத்துறை அரசு ஊழியர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கும் இவருடைய அனைத்து சேவைகளையும் பாராட்டி சோழன் உலக சாதனை புத்தகம் நிறுவனத்தினால் சமூக நல சேவை சான்றிதழ் வழங்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்