திருவாரூர்: குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை திருவாரூர் மாவட்ட நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர் திருத்துறைப்பூண்டி, என நான்கு நகராட்சிகளுக்கும் பேரளம்,
நன்னிலம், குடவாசல், வலங்கைமான் கொரடாச்சேரி, நீடாமங்கலம் முத்துப்பேட்டை உட்பட 7 பேருராட்சிகளுக்கும்
19.02.22 அன்று உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது . இந்நிலையில் மாவட்ட காவல்துறை சார்பில் நாளை நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 11 துணை காவல் கண்காணிப்பாளர்கள் 35 காவல் ஆய்வாளர்கள், 70 காவல் உதவி ஆய்வாளர்கள்,
700 காவலர்கள், 200 ஊர்க்காவல் படையினர் என 1200 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் 17 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
மாவட்டம் முழுவதும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் காவலர்கள் என 30 ரோந்து வாகனங்கள் (MOBILE PARTY) பாதுகாப்பு பணியில் உள்ளது. பதற்றமான 37 வாக்குசாவடிகள் மாவட்டத்தில் கண்டறியப்பட்டு கூடுதலாக ஒரு உதவி ஆய்வாளர் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா