இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், தோட்டக்கலை மலர் கண்காட்சியை துவக்கி வைத்து இராமநாதபுரம் மாவட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்ட மலர் கண்காட்சியினை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தவறாமல் பார்த்து செல்ல வேண்டுமென இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள் . இராமநாதபுரம் மாவட்டம், அச்சடிப்பிரம்பில் தோட்டக்கலை துறையின் மூலம் 2வது தோட்டக்கலை மலர் கண்காட்சி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்று 2வது தோட்டக்கலை மலர் கண்காட்சியை திறந்து வைத்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்ட பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் நினைவு சின்னங்களை பார்வையிட்டு
தெரிவிக்கையில், தோட்டக்கலைத்துறையின் மூலம் இராமநாதபுரம் நகர், அருகாமையில் அச்சடிபிரப்பு பகுதியில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் பாலை ஐந்திணை மரபணு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேல் பூக்கள் வரவழைக்கப்பட்டு இராமநாதபுரம், இராமேஸ்வரத்தின் பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் வகையில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் கங்காரு, டைனோசர், திமிங்கலம் மற்றும் முதலை ஆகியவற்றின் உருவங்களை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருப்பது மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் உள்ளது. அதேபோல் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் கண்டுபிடிப்பான பி.எஸ்.எல்.வி ராக்கெட் வடிவில் காய்கறிகள்
மூலம் அமைக்கப்பட்டதும், இராமேஸ்வரத்தில் உள்ள இரயில்வே மேம்பாலம் போல் பல்வேறு வகை காய்கறிகள் மூலம் வடிவமைக்கப்பட்டது. அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
இதுமட்டுமின்றி நறுமணம் கொண்ட திரவியங்களால் தயாரிக்கப்பட்ட யானை மற்றும் அகத்தியர் முழு உருவ சிலை மிக நன்றாக உள்ளன. இத்தகைய மலர் கண்காட்சி மாவட்டத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது. இக்கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும். மாவட்டத்தில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வருகை தந்து இக்கண்காட்சியினை பார்த்து பயன் பெற்றிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆ.ம.காமாட்சி கணேசன் அவர்கள், மாவட்ட வன அலுவலர் திரு.பகவான் ஜெகதீஷ் சுதாகர்,இ.வ.ப., அவர்கள், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திரு.நாகராஜன் அவர்கள் மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி