சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பாக தகவல் தெரிவிப்போர் வழக்கு பதிவு செய்தல் மற்றும் தீருதவிகள் தொடர்பான முறையீடுகளை, அலுவலக நாட்களில் குறிப்பிட்ட கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வாயிலாக புகார்களை பதிவு செய்யலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்,2023-2024 ஆம் ஆண்டு சட்டமன்ற பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக்கோரிக்கையின் போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்கவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவி மையம் அமைக்கப்படும் என ,அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், தமிழகத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பாக ,தகவல் தெரிவிப்போர், வழக்கு பதிவு செய்தல் மற்றும் தீருதவிகள் தொடர்பான முறையீடுகளை, 18002021989 அல்லது 14566 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி, அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக அலுவலக நாள்களில், அலுவலக பணிநேரத்தில்புகார்களை பதிவு செய்யலாம் என , மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி