மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ,
உள்ள 37 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வடுகபட்டி ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ,
துணைத் தலைவர் அன்புமுத்து, பற்றாளர் லட்சுமிகாந்தன் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் பங்கஜவள்ளி தீர்மானங்களை வாசித்தார். அய்யங்கோட்டை ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ,துணைத் தலைவர் முருகேசன், பற்றாளர் வடிவு ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் தெய்வேந்திரன் தீர்மானங்களை வாசித்தார். தனிச்சியம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் பொன்னழகு மாரி செல்லப்பாண்டி தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் துணைத் தலைவர் மணிவண்ணன், பற்றாளர் ஶ்ரீபிரியா ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் ராஜாங்கம் தீர்மானங்களை வாசித்தார். கொண்டையம்பட்டி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் மலைச்சாமி தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் துணைத் தலைவர் ரெங்கராஜன், பற்றாளர் பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் பங்கஜவள்ளி தீர்மானங்களை வாசித்தார். சின்னஇலந்தைகுளம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் துணைத் தலைவர் மெர்லின் விமலா குமாரி, கூட்டுறவு சங்க செயலாளர் பாஸ்கரன், பற்றாளர் பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் சுவிதா தீர்மானங்களை வாசித்தார்.
கல்லணை ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் சேது சீனிவாசன் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அய்யம்மாள், யூனியன் உதவி பொறியாளர் துர்காம்பிகை, ஒன்றிய கவுன்சிலர் சுப்பராயலு உள்ளிட்டா பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நித்யா பழனிநாதன் தலைமையில் ஊராட்சி செயலாளர் ராஜா தீர்மானங்களை வாசித்தார். அச்சம்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீசுதா முருகன் தலைமையில் ஊராட்சி செயலர் முருகேஸ்வரி கலந்து கொண்டு தீர்மானங்களை வாசித்தார். 15.பி.மேட்டுபட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தீபா நந்தினி மயில்வீரன் தலமை தாங்கினார் ஊராட்சி செயலாளர் ஸ்டாலின் தீர்மானங்களை வசித்தார். எர்ரம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டங்களில் அந்தந்த ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், கூட்டுறவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் தெரு விளக்கு சாக்கடை வசதி பேவர் பிளாக் சாலை அமைத்தல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி