திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த (08.07.2022) ம்தேதி தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வில்வபதி (55), மற்றும் வினோத்குமார் ஆகியோரை தொழில் விஷயமாக டெல்லிக்கு அழைத்து அவரை கடத்தி பணம் பறிக்க முற்பட்ட டெல்லியைச் சேர்ந்த ஜீர்வானி பாபு (48), முகமது ஆசாத் (29), முகமது சந்த் (எ) சோனு (25), மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆசிப் ஹுசைன் (47), முகமது கரீம் (32) ஆகிய 05 நபர்களை திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மேற்கண்ட 05 நபர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் 05 நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உத்தரவை தொடர்ந்து தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் திரு.ஜீர்வானி பாபு, முகமது ஆசாத், முகமது சந்த் (எ) சோனு, ஆசிப் ஹுசைன், முகமது கரீம் ஆகிய 05 நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா