திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின்பேரில் (10.01.2026) ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி, ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திருமதி ராணி அவர்களின் தலைமையில், ஆம்பூர் பெரியாங்குப்பத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஷூ தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் POCSO சட்டம், குழந்தை திருமணம் தடுப்பு, இணையவழி குற்றங்கள், போதைப் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், போக்குவரத்து விதிமுறைகள், அவசர உதவி எண்கள் மற்றும் Kaaval Udhavi App பயன்பாடு குறித்து விரிவாக விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து காவல்துறை எப்போதும் துணை நிற்கும் என்றும், சட்ட உதவி தேவைப்படும் நேரங்களில் தயங்காமல் காவல்துறையை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊழியர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
















