திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.சிலம்பரசன்., அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட காவல்துறையினர் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்கள் வழியாக சென்று பள்ளி மாணவர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து போதை பொருள் பயன்படுத்துவதின் தீமைகள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும், வீடுகளில் திருட்டு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக செய்ய வேண்டியது குறித்தும், சைபர் கிரைம் குற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டிய சைபர் கிரைம் காவல்துறையினரின் 1930 எண் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய 1098 மற்றும் 181 எங்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிப்பது குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.