சிவகங்கை : சிவகங்கை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து வாகன திருட்டு நடைபெறுவதாக வந்த புகார் மனுக்களை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித்நாதன் ராஜகோபால் ஐ.பி.எஸ் அவர்கள் உத்தரவின் பேரில் சிவகங்கை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.முத்துராமலிங்கம் அவர்கள் மேற்பார்வையில் சிவகங்கை நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.மீனாபிரியா அவர்கள் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் 31.01.2021 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் (எ) விஜயன் மற்றும் சரவணன் ஆகிய இரண்டு நபர்கள் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மேற்படி இரண்டு நபர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து திருடுபோன லாரி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.டுங்கள்..! சாலை பாதுகாப்பு!! உயிர் பாதுகாப்பு!!
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி