தஞ்சை : தஞ்சை மாவட்டம், கும்பகோணம் டவுன் புறப்பகுதிகளில் தொடர் வழிப்பறிகள் நடைபெற்று வருவதாக வந்த தகவலின் பேரில் இக்குற்றச் செயலில் ஈடுபட்டு வருபவர்களை இனம் கண்டு அவர்களை உடனடியாக கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆஷிஷ் ராவத் ஐபிஎஸ் அவர்கள் உத்தரவிட்டார் .அதனை தொடர்ந்து கும்பகோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு மகேஷ் குமார் – டிபிஎஸ் அவர்களின் மேற்பார்வையில் கும்பகோணம் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு கீர்த்தி வாசன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜா ,செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், செந்தில், நாடிமுத்து, ஜனார்த்தனன், பார்த்திபநாதன், ஆகியோர் கொண்ட போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் படி கும்பகோணம் பகுதிகளில் தொடர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த வழிப்பறி கொள்ளையர்களான கும்பகோணம் மணஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன் மூர்த்தி (23 ), சந்தனாள்புரத்தை சேர்ந்த ஏசுராஜ் மகன் பிரசாந்த் (23), பெருமாண்டியைச் சேர்ந்த பூபதி மகன் மகேந்திரன் (23) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு செல்போன்கள் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்