விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் உட்கோட்டம் பகுதிகளில் தொடர் வழிப்பறி கொள்ளை சம்பவம் நடந்ததையொட்டி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா ஐ.பி.எஸ், அவர்கள் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டறிய உத்தரவிட்டதன் பேரில் ஏ.எஸ்.பி திரு.அபிஷேக் குப்தா, திருமதி. பிருந்தா ஐ.என்.எஸ், திரு.சண்முகம் எஸ்.ஐ, மற்றும் காவலர்கள் தலைமையில் தனி படை அமைத்து தேடி வந்த நிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த வினோத்குமார், மற்றும் லோகநாதன் ஆகிய இருவரை கைது செய்து குற்றவாளிகளிடமிருந்து 25, சவரன் நகை கார் மற்றும் ஆயுதங்கள், பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.