திருவாரூர்: திருவாரூர் மாவட்டம்நீடாமங்கலம் காவல் சரக பகுதிகளில் தொடர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த காமராஜ் 39, என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் தனிப்படை அமைத்துகைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரை மற்றும் அதிரடி நடவடிக்கையின்பேரில் குற்றவாளி காமராஜ் இன்று குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இதுபோன்று திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீதும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.