விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அடுத்தடுத்து தொடர் நகை பறிப்பு நடைபெற்றதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி அருப்புக்கோட்டை நகர காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலமுருகன் மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.இராஜபுஷ்பா ஆகியோரின் தலைமையில் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 5 நபர்களை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து நகை மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.