கோவை : கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் துளசியம்மாள். இவர் தனது வீட்டின் அருகே நடைபயிற்சி செய்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், துளசியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து போத்தனூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேரூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் பாபு (26) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் சுந்தராபுரம் இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் நாகார்ஜுன் (29) என்பவருடன் சேர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். மேலும் அவர்கள் கடந்த 2018-ம் ஆண்டு, போத்தனூரில் சுலோக்சனா என்பவரிடம் 2½ பவுன் நகை, எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த திவ்யா என்பவரிடம் 2 பவுன் நகை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்