திருவாரூர்: முத்துப்பேட்டை காவல் சரக பகுதியில் தொடர் திருட்டு, கொள்ளை, கன்னக்களவு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த திருடர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தனிப்படை அமைத்து.
தனது நேரடி பார்வையில் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் வேலாயுதம் 45 செல்லமுத்து போயர் தெரு பொட்டனம் சேந்தமங்கலம் நாமக்கல் மாவட்டம்என்பவரை தனிப்படையினர் கைது செய்து,
அவரிடமிருந்து 2 கிலோ வெள்ளி மற்றும் 1 சவரன் தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அந்தோணி ராஜா














