திண்டுக்கல்: திண்டுக்கல்மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக மர்ம நபர் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.சோமசுந்தரம் அவர்களின் ஆலோசனைப்படி ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.வெங்கடாசலபதி அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.கணேசன் ரெட்டியார்சத்திரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.சரவணன் மற்றும் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட குற்றத்தடுப்பு பிரிவு தலைமை காவலர்கள் திரு.ஸ்ரீனிவாசன், திரு.ஞானவேல், முதல் நிலை காவலர்கள் திரு.வேளாங்கண்ணி திரு.மாரீஸ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் பல்வேறு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் சிவகங்கை மாவட்டம் ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் 38 என்பவர் என தெரியவந்தது, அவரை சுற்றிவளைத்து பிடித்த காவல்துறையினர் அவரிடமிருந்து 16 லட்சம் மதிப்புள்ள 40 சவரன் தங்க நகைகள், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.