தென்காசி : தென்காசி மாவட்டம், ஆலங்குளம் உட்கோட்ட காவல் நிலையங்களான ஆலங்குளம், கடையம் பாவூர்சத்திரம், மற்றும் ஊத்துமலை பகுதிகளில், இரவு நேரத்தில் கடை, வீடு உடைப்பு, 300 வருட பழமையான ஐம்பொன் சிலை மற்றும் 2- ராயல் என்ஃபீல்டு புல்லட் வாகனங்கள் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகனான வினோத் குமார், என்ற முகமது நசீர் (30), என்ற நபரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கடையம் காவல் ஆய்வாளர் திரு.சரவணன், அவர்களுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் I.P.S, அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில்,மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை (26.07.2022) அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில், காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் சமர்பித்தார்.