விருதுநகர் : விருதுநகர் பேராசிரியர் காலனி மற்றும் ICA காலனி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தொடர் கொள்ளை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் அறிவுரையின்படி, விருதுநகர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.S.R.சிவபிரசாத் IPS அவர்கள் தலைமையில், காவல் சார்பு ஆய்வாளர் திரு. அன்புதாசன்,தலைமை காவலர் திரு.அழகுமுருகன், முதல்நிலை காவலர்கள் திரு.பிரபு, திரு.சிவகுமார்,திரு. முத்துஅய்யனார்,திரு.பாண்டியராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சம்பவ நடந்த இடத்திலிருந்து சிசிடிவி காணொளி காட்சிகளை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது விருதுநகர் அம்பேத்கர் நகரை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பதனை கண்டுபிடித்து கைது செய்தனர். மேற்படி நபரிடம் நடத்திய விசாரணையில், திருட்டு நகைகளை முத்து ஆசாரி என்பவரிடம் விற்பனை செய்தது தெரியவந்ததையடுத்து, பாலசுப்ரமணியன் மற்றும் முத்து ஆசாரி ஆகிய இருவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்ததோடு, திருடு போன நகைகளை குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்தனர்.
மேலும் இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட விருதுநகர் தனிப்படை காவல்துறையினரை, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.