தேனி : தேனி மாவட்டத்தில் தேனி, வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி, ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் தொடர் செயின் பறிப்புகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் தேனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.G.பார்த்திபன் அவர்களின் மேற்பார்வையில் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.A.ராஜேஷ் அவர்கள் தலைமையில் SSI.திரு.கர்ணன், SSI.திரு.நாகராஜ் Hc.1611.திரு.செல்வம், Hc.1591.திரு.கணேசன், GR 1-293.திரு.விஜய் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் CCTV கேமராக்களை ஆய்வு செய்தும் மற்றும் cyber crime cell காவல்துறையினர் உதவியுடன் செயின் பறிப்பு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ஜீவன், பிரேம்குமார் (ஆண்டிப்பட்டி) ஆகிய இருவர்களை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்து களவு சொத்துக்கள் மற்றும் களவுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். தொடர் செயின் பறிப்பு வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த தனிப்படையினருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.