கோவை : கோவை மாநகர் E – 1 சிங்காநல்லூர், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மசக்காளிபாளையம், செங்குட்டை வீதியில் உள்ள பூட்டி இருந்த வீட்டில் 15 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை போனது சம்பந்தமாக E -1 சிங்காநல்லூர் காவல் நிலைய குற்ற எண் 328/2023, சட்டப்பிரிவு 454, 380 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோவை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பெயரில், காவல் துணை ஆணையர் அவர்கள் (தெற்கு), காவல் உதவி ஆணையர் அவர்கள், சிங்காநல்லூர் சரகம் ஆகியோர் மேற்பார்வையின் கீழ் சிங்காநல்லூர் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மேற்படி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேட சிங்காநல்லூர் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மேற்படி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்ததில் கரூர் மாவட்டம், வெங்கமேட்டை சேர்ந்த ரமணி என்பவர் இக்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
அவர் ஏற்கனவே சிங்காநல்லூர் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட மசக்காளி பாளையம், நீலியம்மன் கோயில் வீதியில் ஒரு வீட்டின் பகல் நேரத்தில் நோட்டம் விட்டு யாரும் இல்லாத நேரத்தில் வீடு புகுந்து திருடியதும் யாரேனும் பார்த்து விசாரிக்கும் போது வாடகைக்கு வீடு பார்க்க வந்ததாகவும் அல்லது உறவினர் வீட்டிற்கு வந்ததாகவும், பொய்யான தகவல்களை கூறி தப்பி செல்வதையும் வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். இவருக்கு ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் ஏழு திருட்டு வழக்குகளும், நாமக்கல் மாவட்டத்தில் 6 திருட்டு வழக்குகளும், திருப்பூர் மாவட்டத்தில் ஒரு திருட்டு வழக்கும், திருச்சி மாநகரில் ஒரு திருட்டு வழக்கும், ஈரோடு மாவட்டத்தில் இரண்டு திருட்டு வழக்குகளும், உள்ளது. மேலும் இவ்வழக்கில் புலன் விசாரணை செய்தும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கண்டுபிடித்தும் அவரிடம் இருந்த வழக்கு சொத்துக்கான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. கோவை மாநகர் கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் இருந்த போது அவருக்கு உதவிய ஏற்கனவே பழக்கமான கோவை கணபதியை சேர்ந்த வினையா ஆகியோர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்