திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் குற்றவாளிகளான அம்பாசமுத்திரம், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சம்சூதீன் 34, சுப்பிரமணியன் 24. கிஷோர் 20. ஆகிய மூன்று நபர்களும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை மற்றும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் கவனத்திற்கு வந்ததால்.
குற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆய்வாளர் திருமதி. சீதாலட்சுமி அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில்,
மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் இன்று குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர்.