திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அருண், லாரன்ஸ், சம்சுதீன் ஆகிய மூன்று பேரை கடந்த மாதம் நிலைய ஆய்வாளர் திரு.ரமேஷ் ராஜ் அவர்கள் கைது செய்து திண்டுக்கல் மாவட்ட கிளைச் சிறையில் அடைத்தனர்.
இவர்கள் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு இரா. சக்திவேல் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திருமதி. விஜயலட்சுமி இ.ஆ.ப அவர்கள் மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார் இதையடுத்து மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா