விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா¸ இ.கா.ப.¸ அவர்களின் உத்தரவின்பேரில்¸ திண்டிவனம் காவல்நிலைய தனிப்படை காவல்துறையினர்¸ தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் மற்றவர்களுக்கு உதவுவது போல் நடித்து¸ போலி ஏ.டி.எம் கார்டை மாற்றி கொடுத்து தொடர் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபரை சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்து அவரிடமிருந்து 8 ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் ரூ.19 ஆயிரம் பணம் பறிமுதல் செய்தனர்.