மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், மதுரை மாவட்டத்தில் திருட்டு வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் திருட்டு வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 30.09.2022 ஆம் தேதி முதல் தற்போது வரை மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டம் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் திருடு போனது சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. 24.11.2022 ம் தேதி மேற்படி திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட இரண்டு நபர்களை காவல் துறையினால் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மேற்படி வழக்கின் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேற்படி திருட்டு வழக்குகளில் விரைவாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை கைது செய்து, வாகனங்களை பறிமுதல் செய்த திருமங்கலம் நகர் காவல் நிலைய தனிப்படை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். மேலும், மதுரை மாவட்டத்தில் திருட்டு சம்பவ குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவபிரசாத் இ.கா.ப அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி