திண்டுக்கல்: சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையத்தில் வழக்கமான ரோந்து பணியில் சூலூர் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமான வகையில் மினி லோடு ஆட்டோ ஒன்று வந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் அந்த ஆட்டோவை நிறுத்தி ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்த ஓட்டுனர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.
இதனையடுத்து ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உடன் வந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சின்னதுரை (35) மற்றும் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேஷ்(30) என்பதும் இருவரும் சூலூர், சுல்தான்பேட்டை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மினி ஆட்டோக்கள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும் திருடப்பட்ட ஆட்டோவில் உள்ள உதிரிபாகங்களை தனித்தனியாக பிரித்து மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் காங்கயம்பாளையம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 மினி ஆட்டோக்களை பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.